வசந்த வாழை - சிறுகதை

வசந்த வாழை - சிறுகதை









அருள்தாசுர்ம் அவள் மனைவியும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். காரின் வேகத்தால் காற்று முகத்தில் அறைந்தது. உணர்வற்றவர்களாய் மௌனம் சாதித்தனர். கோர்ட்டுக்கு செல்ல்ய்ம் இவர்களுக்குத் தீர்ப்பு நாள் இன்று.


காரின் வேகம் திடீரெனக் குறைந்தது. என்னவென்று பார்த்தால் சாலையில் இவர்களைக் கடந்து சென்ற திருமண ஊர்வலம் கண்களில் தென்பட்டது. மணப் பெண்ணைப் பார்த்ததும் மனம் கலங்கியது அருள்தாசுக்கு. வழிந்துவந்த கண்ணீரைத் தன்னிடம் அடக்கிக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த மனைவி காணாதவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவளது நிலையும் அதுவே.

கார் ஊர்வலத்தைக் கடந்து சென்றது. ஆனால் அருள்தாசின் மனம் மட்டும் நான்கு ஆண்டுகளைக் கடந்து பின்னோக்கிச் சென்றது.

நாளொரு மேனியும். பொழுதொரு வண்ணமுமாய் பொறுக்கிந்டுத்த உலக அழகுகளையெல்லாம் நெருக்கித் தொடுத்த நேர்த்தியான தங்கப் பதுமையாய் வளர்ந்து நின்றாள் அருள்தாசின் அன்பு மகள்.

கல்வியைப் போலவே அவளின் திறமைக்கேற்ற பணியும் அமையப் பெறவே அவளுக்கு விரைவில் மணம் புரிய வரன் தேட ஆரம்பித்தனர் பெற்றோர்கள். கண்ணிற்கு இனியாளின் கருத்திற்கு இணங்க மணமகனும் அமையப் பெற்றான். இதோ இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற அளவில், ஏற்பாடுகள் அனைத்தும் வெகு விமர்சையாக நடந்தவண்ணம் இருந்தன.

இதற்கிடையில் பணி முடித்தவுடன் தன் அன்புத் தோழிகளுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள் அவர்களின் மூத்த மகள் ரம்யா. அதுதான் அவள் பெயர்.
அன்று விடுமுறை நாள் என்பதால் வேகமாய் வெளியில் புறப்படத் தயாரானாள் ரம்யா. தன் தோழி ஷாலினியின் வருகைக்காக வாசலிலேயே வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தவுடன் தன் தந்தை அருள்தாசிடம் விடைப்பெற்றுக்கொண்டு தன் தோழி ஷாலினியின் இருசக்கர வாகனத்தின் பின் விரைந்து ஏறிக்கொண்டு புன்னகையுடன் தன் பெற்றோர்களை நோக்கிக் கை அசைத்தவாறு சிட்டாய்ப் பறந்து சென்றாள்.

அவர்கள் டாடா கன்சல்டன்சி அலுவலகத்திற்கு அருகே வந்துகொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால் அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் அவர்களின் இருசக்கர வாகனத்தை மோதிச் சென்றது. அப்பொழுது வண்டிக்குப் பின்புறம் அமர்ந்திந்த ரம்யா தூக்கி எறியப்பட்டாள். உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவளின் இன்னுயிரும் இவ்வுலகினைவிட்டுப் பிரிந்து சென்றது.

கதறினர் பெற்றோர். கண்மணியைக் காவு வாங்கிய கழகப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்நிலையில் அவள் மகள் ரம்யா பணிபுரிந்துவந்த தனியார் நிறுவனத்தினரிடம் விபத்தில் உயிரிழந்த தன் மகள் ரம்யாவிற்கு ஒரு நியாயமான இழப்புத் தொகையை வழங்கக் கோரி மேல் முறையீடு செய்திருந்தனர். .

அதன் படி ரம்யா தற்போது வாங்கிக் கொண்டிருந்த மாத வருமானம் மற்றும். அவள் இறுதிச் சடங்கிற்கான செலவீனம், மேலும் எதிர்காலத்தில் அவள் இருந்திருந்தால் அவள் வளர்ச்சிக்கான செலவீனத் தொகை ஆகிய அனைத்தையும் சேர்த்து மனு கொடுத்த நாள் முதல் ஆண்டொன்றுக்கு வைப்பீடு செய்யும் நாள் வரை எதிர் மனுதாரர் வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெற்றோர்களுக்குப் பணம் கையை நிரப்பியது. “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பதைப் போல் தன் இறப்பிற்குப் பின்பும் ரம்யா தன் பெற்றோர்களுக்கும் சகோதரிகளுக்கும் உறுதுணையாய் இருந்துகொண்டு அவர்களின் பொருளாதாரச் சிக்கலைப் போக்கி வசந்த வாழையாகவும். தெய்வமாகவும் செயல்புரிகிறாள் இன்னும் இருந்துகொண்டு.

------------------------------------

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (24-Oct-19, 4:10 pm)
பார்வை : 229

மேலே