விசும்பின் துளிவீழின்
இந்த இரவு மழை
இரவுக்குள்ளும் பெய்கிறது.
சுவர்களின்
அதன் நிறங்களின் மீதும்...
மரங்களின் மீது
பறவைகளின் மீதும்...
மௌனமாக இருந்தால்
மனதுக்குள்ளும் பொழிகிறது.
மழையில் நனையாது போனாலும்
அதன் ஓசையில் நனையும்
மனதிலெல்லாம்
ஒலியில் மிஞ்சிய இருட்டின் ஈரம்.
வரவிருந்த கனவுகள்
சாயமிழந்து கதைகள் இழந்து
மழைக்குள் மிதக்கின்றன
பழைய வாளிகளாய்
கூரை நீரை குடித்தபடி.
வீடு வீடாய் கடந்து
தெருத்தெருவாக ஓடும்
இரவு மழைக்கொரு
பசித்த தகவலாய் இருக்கிறது
என் தனிமையும்
அவள் நினைவும்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
