பூவிழி தேன்மொழியோ

எட்டும் கனி அல்லவே
நீ எந்தன்
பூவிழி தேன்மொழியோ
சுட்டும் வான் சுடரும்
நின் கண்கள்
பேசத் துணிவில்லையோ

பட்டும் பால் நிறமும்
ஒன்றாகக் கூடிய தேகமோ
கட்டும் கண்ணிரண்டும்
கொட்டாமல் பார்த்திட தோன்றிடுமோ

எழுதியவர் : புரூனே ரூபன் (25-Oct-19, 12:18 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 97

மேலே