அவளும் அவள் மௌனமும்

உன்னைக் கண்டதிலிருந்து பெண்ணே
என் மனதில் உன்னை
உயிர்கொண்ட ஓர் சிலையாய் நினைத்து
உன் காதல் வேண்டி
உன் காலடியில் கிடக்கிறேன்
உண்மையில் நீயோ என்னை பார்த்தும்
ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கின்றாய்
'மௌனம் ' நீ சொல்லும் சம்மதமா,
மௌனத்தால் நம் இருவர் இடையே
காதல் வளர நீ செய்யும் யோகமா .
என்னென்று எடுத்துகொள்வேனடி
உந்தன் மௌனத்தை .............
மௌனம் எல்லாவற்றையும்
இனிதாய் நடத்திக்காட்டும் என்பதா .
நீயே சொல்வாயோ பெண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-19, 3:25 pm)
பார்வை : 201

மேலே