கடலும் காற்றும்

தோணி அழகாய் கடலில்
குழந்தை போல் தவழ்கிறது
குழந்தைகள் அனைவரும் கடலில்
மகிழ்ச்சியாக தோணி போல் தவழ்கிறார்கள்

அலைகள் கால்கள் இல்லாமலே
பாதைகள் தேடி கரைகளை தொட்டது
கப்பல்கள் வந்து போன நீர் குமிழிகளை
கடலின் கண்கள் இதுதான் என்று உணர்ந்தேன்

மீனவர் வீசிய வலைகள்
கடலுக்கு போட்ட மாலை என அறிந்தேன்
போர் கப்பல் வீசிய நங்கூரத்தால்
கடலின் கடவாய் அழுக்குகள் சுத்தமானது

விமானம் கடற் மேல் பறக்க
மாலுமிகள் தார்பாய் கயிற்றை இழுக்க
கடற் தேசிய தினமோ என்று நான் வியப்பில் இருந்தேன்

சங்குகள் மெல்ல அழைக்கிறது
அதன் சங்கடங்கள் உணர்ந்தேன்
முத்துக்கள் சத்தமாய் சிரிக்கிறது
அதன் முகத்திரை அறிந்தேன்

பலவகை மீன்கள் இருந்தும்
யாரும் விலைபேச வரவில்லை
ஒரு வகை மீன்கள் கூட
என் கையில் அகப்படவில்லை

சுழல் வந்தது என் பெயர் சொன்னார்கள்
சூழல் மாறியது கடற் பெயர் சொன்னார்கள்
ஒன்றாய்தான் இருக்கிறோம் நானும் கடலும்
இப்படிக்கு காற்று.....

BY ABCK

எழுதியவர் : (25-Oct-19, 5:58 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : katalum kaatrum
பார்வை : 99

மேலே