நற்றுணை
கற்பனை விரித்து கதைகள்
புனைந்து உறங்க வைக்கும்!
நற்சொற்கவிதைகள் நயமாய்
வனைந்து கிறங்க வைக்கும்!
அற்புதமான வாழ்வின்பொருளை
ஆழமாக அறிய வைக்கும்!
அறிவு சார்ந்து வாழும்முறையை
ஆழ்மனதிற்கு புரிய வைக்கும்!
அறநெறியை, பண்பை,உறுதியை
அறிவில் ஏற்றி உயர வைக்கும்!
சிறந்தஅன்பை,கனிவை,பரிவை
அகத்தில் ஏற்றி பகிர வைக்கும்!
பற்பலதுறை அறிவை புகட்டி நமை
போற்றும் நல்தரத்தில் வைக்கும்!
வயதிற்கேற்ற செய்தி தந்து நமை
விழிகள் விரிய வியக்க வைக்கும்!