94 அவள் - 04

94 அவன் அவள் காதல் ‍‍- 04
==========================
# அவள் _04
==========

ஏன் எனை குறுகுறுவெனப் பார்க்கிறாய்?
நான் பார்த்திட உன் விழி சேர்க்கிறாய்..
தைரியமான பெண் தான்
இப்போது எப்படி வெட்கம் எனக்கு?
இப்பொழுதெல்லாம் வருகை பதிவிற்கு
நீ இசைவளித்ததும் உள்ளம் துள்ளுகிறது..
பின் என் கையே என்னைக் கிள்ளுகிறது..
நேராய் பார்க்கும் போது பார்க்க மறுக்கிறாய்
வானம் பார்க்கும் வேளை என்னை முறைக்கிறாய்
நடக்கட்டுமிந்த கண்ணாமூச்சி விளையாட்டு
தாயம் ஆடும் போதெல்லாம் நீயுமாடுகிறாய் மனதில்
எப்போது தான் வாய் திறப்பாய் பார்க்கலாம்..?

அ_வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (6-Nov-19, 11:10 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 366

மேலே