இயற்கை

விடியலை அறிவிக்க
கூவும் சேவல்
பாடும் கருங்குயில்
கரையும் காகம்
பருவத்தில் பெய்து
தீர்க்கும் மாமழை
நமக்கு வாழ்வின் ஜீவாதாரம், உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பு தரும் கடல் நீர்
அள்ளி அள்ளி தரும் மீனும் நண்டும்
வற்றா நதி நீர்
வாழவைக்கும் நீர் ,
அள்ளி அள்ளி தரும்
மக்கள் மிக்க விரும்பும்
' நல்ல நீர்' மீன்


இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்
இவை இப்பணிக்கு
ஏதும் கேட்பதில்லை
நாம்தான், மனிதர் நாம் ,
செய்யும் ஒவ்வொரு பணிக்கும்
பிரதியுபகாரம் எதிர்பார்க்கிறோம்

ஏதும் எதிர்பாராது அள்ளி அள்ளி
வழங்கும் கொடை வள்ளல்
இயற்கை ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Nov-19, 2:01 pm)
Tanglish : iyarkai
பார்வை : 605

மேலே