நெஞ்சில் திறக்கும் நாவல் நீ

நினைத்தால் நெஞ்சில் சொட்டிடும்
தேன்துளி நீ
கண்களை நான் மூடினால்
கனவாய் விரியும் ஓவியம் நீ
தென்றலில் நிலவில் வந்தால்
அந்த வானத்துத் தேவதை நீ
மறக்க முயன்றால் நெஞ்சில்
திறக்கும் நாவல் நீ
நினைத்துக் கொண்டே இருந்தால்
நாளும் பொழுதும் முழுதும் நீயே !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-19, 5:44 pm)
பார்வை : 74

மேலே