காற்றின் ஈரப்பதம்

வருடிப்போகும்
காற்றில்
ஈரப்பதம்
உணர்கையில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
மடி சாய்த்துக்கொள்ள
முடியாத ஆதங்கத்தில்
வெளிவந்த
என்னவளின்
கண்ணீர்துளிகள்
கலந்திருக்குமோ என்று....

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (12-Nov-19, 7:48 pm)
சேர்த்தது : sowmyasuresh
Tanglish : kaatrin eerappatham
பார்வை : 85

மேலே