அவள்
காதல் கவிதைகளே எழுதி எழுதி
எழுதும் கவிதைதான் காதல்
என்று நினைத்து காதல் கவிதை மேல்
மோகம் கொண்டு வாழ்ந்த நான்
முதல் முதலாய் அவளைப் பார்த்தேன்
என்னை மறந்தேன் அவள் அழகில்
என் விரல்கள் காதல் கவிதை எழுத மறந்து
அவள் அழகிற்கு 'சொடுக்கு' போட்டது .....
கவிதை எழுத முடியவில்லை....
கவிதையே என்முன் நிற்க ..... ஆம்
நான் எண்ணி எண்ணி இத்தனைநாள்
எழுதி வைத்த காதல் வரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து
பெண்ணுருவாய், அவளாய் என்முன் நிற்க
நான் கிறுக்குவதை நிறுத்திக்கொண்டேன்
இப்படித்தான் கவிஞன் நான் காதலானேன்
என்முன்