காதல்

கோயில் சிலைபோல்
தொட்டு தொட்டு ,தட்டி தட்டி
சிற்பி செய்த
அந்த அழகு சிலைபோல் ...
ஆனால் உயிர்கொண்ட சிலையாய்
காட்சி தருகிறாயடி பெண்ணே
உன்னை காதல் தேவதை
என்றே நினைக்கின்றேன் நான்
அருகே வா, அருகே வா
உன் மலர்க்கையால் என்னைக்
கொஞ்சம் தொட்டுவிடு, தொட்டு
என்னையும் ஓர் தேவனாக்கிவிடு
தேவதை உன்னோடு காதல் புரிய
காதல் தேவதைகளைப் போலவே
இனிதாய் வாழ்வோம் இனி
வாழ்வு உள்ளவரை

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (14-Nov-19, 1:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 181

மேலே