என்னைத் தெரிகிறதா

நான் தான் குரங்குகளின் அரசன்,
மனிதர்களின் மூதாதையாராய் குரங்குகளை பரிணமிக்க ஆணையிட்டவன்.
என்னை தெரிகிறதா?

நான் தான் கணக்கில்லா பிறவிகளில் உங்களில் பலரை சந்தித்திருக்கிறேன்.
உங்களோடு அமர்ந்திருக்கிறேன்.
உணவைப் பகிர்ந்து சாப்பிட்டிருக்கோம்.
மரத்திற்கு மரம் தாவியிருக்கிறோம்.
பழங்களைப் புசித்தே பசியாறி இருக்கிறோம்.
என்னை தெரிகிறதா?

குரங்கின் பிடி பற்றி நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
விழுந்தாலும் மரக்கிளையோடு விழ வேண்டும்,
வாழ்வில் அத்தனை சறுக்கல்களும் ஞானம் தரும்.
மறக்கக் கூடாது.
பிறவிகள் எத்தனை கடந்தாலும் பிடியைத் தளர்த்தக் கூடாது.
இப்போதாவது என்னை கண்டு கொண்டீர்களா?

காணாத இயலாதவனாக நானில்லை.
என்னைக் கண்டு கொள்வது அவ்வளவு எளிதில்லை.
கண்டாலும் காணாதது போல் தோன்றும்,
காணாவிட்டாலும் கண்டது போல் இருக்கும்.
இப்போது சொல்லுங்கள், என்னைக் கண்டு இருக்கிறீர்களா?

தேனில் இனிமையாக இனிக்கும் நான்,
வேம்பில் கசப்பேன்,
எப்போது இனிப்பும், கசப்பும் ஒன்று போல் உணர்கிறாயோ, அன்று உன்னால் என்னை காண முடியும்.
அதுவரை உங்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பேன்,
என்னை தெரிகிறதா?

( இவ்வரிகளில், ' நான் ', என்பது எழுதிய என்னைக் குறிப்பதில்லை. )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Nov-19, 6:20 pm)
பார்வை : 1194

மேலே