உணர்வால் உணர்வோமா

உயிர் காக்கும் விவசாயம்
உதவாத தொழிலாச்சு
மயிர் மழிக்கும் தொழிலில் தான்
மகத்தான பணம் வரலாச்சு

தரவு செய்யும் ஆட்களால்
தரணி முழுவதும் ஆளுமையாச்சு
தண்ணீர் கூட வியாபாரமாச்சு
கண்ணீரும் பெருகலாச்சு

முறையில்லா காமத்தினால்
முழு நேரமும் பணம் கொட்டலாச்சு
அறிவியல் சாதனம் பெருகலாச்சு
அதிக தவறுகள் நடக்கலாச்சு

அண்ணன் தம்பி உறவு போச்சு
அன்பான குடும்பம் சிதையலாச்சு
பெண்கள் ஆண்கள் சமமாச்சு
பிரச்சனைகளும் வளரலாச்சு

ஆசிரியன் மனம் ஆபாசமாச்சு
அறத்தின் மாண்பு அழியலாச்சு
கள்ளக் காமம் காட்சியாச்சு
காண்பவர் துணிவு பெருகலாச்சு

பணமே உலகின் பிரதானமாச்சு
பிணம் போல மனிதம் போகலாச்சு
படிப்பில் புலமை அதிகமாச்சு
பண்பு முழுவதும் அழுகிப் போச்சு

பழுது பார்க்கும் நிலை வந்தால் மட்டுமே
பழைய நிலை திரும்பலாகும்
பச்சா பாதகம் பாராமல் தண்டனை தந்தால்
படி படியாய் குற்றங்குறையும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Nov-19, 9:04 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே