திருமணமாம் திருமணம்

திருமணமாம் நல்ல திருமணம்
திணவைத் தீர்க்கும் திருமணம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் இணைய
அங்கிகரிக்கும் திருமணம்

பெண்ணின் வீட்டார் விழி பிதுங்க
பெரும் பொருளைக் கேட்கும் திருமணம்
பெற்ற பெண்ணிற்கு பிறந்த உரிமையை
மறுக்க வைக்கும் திருமணம்

அத்தை மாமா என்ற உறவால்
அடக்கி ஆளும் திருமணம்
பெற்றோர் வீட்டைக் காணக்கூட
பெருந்தொகை கேட்கும் திருமணம்

அக்கம் பக்கத்து ஆட்களால்
அவமானப் படுத்தும் திருமணம்
அழகு பிள்ளை பிறக்கும் வரை
அர்த்தம் இல்லா திருமணம்

பந்தாவுக்காக செய்து விட்டு
பரிதவிப்பை கூட்டும் திருமணம்
எல்லா வகைத் தேவைகளையும்
எளிதில் தீர்க்கும் திருமணம்

உள்ள நிலையை பின்பற்றி
உருவாகுகின்ற திருமணம்
உள்ளத்து மகிழ்ச்சியை கூடுதலாக்கி
உறவைத் தருமே திருமணம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Nov-19, 7:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே