பூவுலகின் பேரழகி 3

காதலியே காதலியே

நீ
என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
உன் காதலில் தான்
நான் மிதப்பேன்

என்னோடு நீ பயணம்
செய்யலாம்
கழற்றி விட மாட்டேன்

Fair ரான லவ்லி யான உன்
முகத்தில் இருந்துதான்
Fair and lovely க்கு
மூலப்பொருள் எடுக்கப்படுகிறது.

நீ சூடும் போதுதான்
அது மல்லிகை
பிறகு அதன் பெயரோ
மூலிகை

நீ வெண்மதி
உன்னால்
எனக்கு
இல்லை நிம்மதி

நீ
மட்டும்
சம்மதி
அப்போதுதான்
மகிழும் என்மதி

எனக்கு மிகவும்
பிடித்த மதம்
உன் சம்மதம்

எனக்குப் பிடிக்காத
தோஷம்
உணக்குப் பிடிக்கும்
ஜலதோஷம்

எழுதியவர் : புதுவைக் குமார் (17-Nov-19, 9:53 pm)
பார்வை : 369

மேலே