கோமதி

கவிதை எழுதி
செதுக்க வேண்டியதில்லை...
இவரது குணநலன்களில்
செதுக்கியே கவிதைகள் வரும்...
அவர் கல்லிடை கண்ட
மிக மிக... நல்ல நல்ல...
பெயர்ச் சொல்லிடை
கொண்ட கோம்ஸ்...

கல்வி கரையில...
கல்லூரியில் நிறையபேர்
புத்தகங்களை எப்போதாவது
புரட்டி இருப்பர்...
இவரோ புத்தகங்களை
எப்போதாவது புரட்டாமல்
இருந்திருப்பார் போலும்...
நல்லதோர் பேராசிரியர்
உருவாகி உள்ளார்...
இவர் ஊரில் ஓடுகிறது
வற்றாத ஜீவநதி தாமிரபரணி...
இவரைப்போல் அவர் ஊரில்
யார் வருவார் இனி...

பேராசிரியர் இவரது வகுப்புகளில்
இருந்திட மாணவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்...
இவர் போன்ற பேராசிரியர்
வகுப்புகளுக்கு வராத மாணவர்
மிகக் குறைவாக இருப்பர்...
வராமல் போவதைக்
குறையாய் நினைப்பர்...

இவர் பணிபுரிவது ஒரு
பல்கலைக்கழகம்... இவரே
ஒரு பல்கலைக்கழகம்...
ராகங்கள் தாளங்கள் தெரிந்தவர்..
ஏழிசை கீதங்கள் அறிந்தவர்...
சுருதி தப்பாமல் பாடுவது
இவருக்கு அத்துபடி... அதை
இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...

செல்வம் சேர்த்து வைப்பதற்கு
மட்டுமல்ல.. மனம் மகிழ
செலவழிப்பதற்கும்தான்...
இவரது பட்ஜெட்டில்
ஜவுளிக்கடைச் செலவுகளும்
விமானப் பயணச்செலவுகளும்
இதனைச் சொல்லும்...

யோகா... அது சாகாவரம்
தராவிடிலும் நோய் சாராவரம்
தரும் என்பது இவரது நம்பிக்கை...
பிரம்ம முகூர்த்தத்தில் இதற்கு
இவர் நேரம் கொடுப்பார்...
இவரைப் படைத்த பிரம்மனும்
இதைக்கண்டு பிரமிப்பார்...

வாழ்வின் ஒவ்வொரு
நொடியும் இவருக்கு
ஏதோ வந்து போவதல்ல...
இனிய திட்டமிடலில்
கலந்துரையாடிச் செயலாற்றுவதில்
நல்ல நினைவுகளைத்
தந்து போவது...
இயல்பாய் இருப்பதும்
இயற்கையை ரசிப்பதும்
இவருக்கு இஷ்டம்... இதனால்
இவருக்கு வராது கஷ்டம்...

அன்பும் அறனும் அறிவார்...
பண்பும் பயனும் தெரிவார்...
கசடறக் கற்றார்...
ஆதிபகவன் கணவன் தொழுதெழுவார்...
மகள் தந்தைக்காற்றும் உதவி
தாய் மகற்காற்றும் உதவி
தெளிந்து செய்வார்...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தெரிந்து தெளிவார்...

எப்பொருளிலும் மெய்ப்பொருள்
காண்பார் இவர்...
இன்னா செய்தாருக்கும்
நன்னயம் செய்ய நினைப்பார்...
நெடுநீர் மறவி மடிதுயில்
விலக்குவார்... சினம் என்னும்
சேர்ந்தாரைக் கொல்லி சேரார்...
வள்ளுவர் இருந்தால் சொல்லுவார்..
இவரால் அவர் குறள்கள்
அர்த்தம் கொள்கின்றன என்று...

அய்யராத்துப் பொண்ணு 
கோம்ஸ் பிறந்தது 
நவம்பர் இருபத்தொண்ணு... 
படிப்பதில்... படிப்புச் 
சொல்லிக் கொடுப்பதில் 
இவர் நம்பர் ஒண்ணு... 
படிப்பார்வம் கரையவில்லை..
நட்பார்வம் குறையவில்லை..
எனவே குறையொன்றும்
கோம்ஸுக்கு இல்லை...

எல்லோருக்கும் லப்டப் 
என இதயங்கள் துடிக்கும்... 
இவருக்கோ அது 
ராம்ஸ்... விக்கி என 
அன்பாய்த் துடிக்கும்... 

எதிலும் நேர்த்தி 
இவருக்குப் பிடிக்கும்... 
அதனால் உற்றார் உறவினர் 
நட்புகளுக்கு இவரை 
மிகவும் பிடிக்கும்... 

வரப்புயர எல்லாம் உயரும்...
கோம்ஸ் உயர மாணவ
இனம் இன்னும் உயரும்...
தோழி கோம்ஸ்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்ந்த காலத்தின் இனிமையினும்
வாழும் காலம்.. வரும் காலம்..
இனியதாய்த் திகழ்ந்திட
வானமும் வசந்தமும் வசப்பட...
இறைவனருள் என்றும்
தங்களோடு இருந்திட
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...

அன்புடன் நண்பன்...
இராஜ சுந்தரராஜன்.
👍💐👏🎂🧁😃

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Nov-19, 4:58 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 220

மேலே