அவள் என் காதலி

இவள்.....
வதனமோ செந்தாமரை
நுதலோ பிறைமதி
கூந்தலோ கார்முகில்
நயனங்கள் துள்ளும் கயல்
இதழோ பவழக்கிண்ணம்
நகிலிரண்டும் தாமரை மொட்டு
ஓக்கலையோ வெற்றிலைக்கொடி
அழகு இத்தனையும் தாங்கி வரும்
இவள் ஆடி வரும் தங்க ரதம்போல் இருக்க
கிட்ட கிட்ட வர என் மனம் தொட்ட
பெண்மயிலானாள் , மனதிற்கினியவள்
அவளே என்னவள் என் காதலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Nov-19, 2:14 pm)
Tanglish : aval en kathali
பார்வை : 271

மேலே