கடிவாளம்

கொட்டிகிடக்கும் சொர்ணத்தை
கூட மறுக்கும் மனம்
வர்ணபூச்சு ஓவியமாய் காட்சிதரும்
அழகுசிலை ஒன்றை அருகே
அமரவைத்து
அதீத கற்பனை வேண்டாம்
அளவோடு நிறுத்திக்கொள்
என்றால் ஆகுமா
என்னை கட்டுப்படுத்திக்கொள்வேன்
என் எண்ணங்களை கடிவாளம்
போட்டு நிறுத்தலாகுமா