ஏனென்று கேட்காமல் பூமிக்கு வந்த வானத்துத் தேவதையே
மாலைப் பொழுதென்பதோ
மல்லிகை மலரென்பதோ
தேனென்பதோ தெவிட்டா தமிழ்ப்பா என்பதோ
பூவென்பதோ புன்னகை மலர் என்பதோ
வான் என்பதோ வண்ண நிலா என்பதோ
ஏனென்று கேட்காமல் பூமிக்கு வந்த வானத்துத் தேவதையே
உன்னை என்னென்று சொல்வேன் தோழி !