எதிர்பார்ப்பு தரும் மாற்றம்

நட்பினை எதிர்பார்த்தேன்
நண்பர்களிடம் ஏமாந்தேன்!

நேசத்தினை எதிர்பார்த்தேன்
தோழியிடம் ஏமாந்தேன்!

பாசத்தினை எதிர்பார்த்தேன்
மகள் மகனிடம் ஏமாந்தேன்!

உண்மையினை எதிர்பார்த்தேன்
உறவுகளிடம் ஏமாந்தேன்!

கடமை செய்து எதிர்பார்த்தேன்
கணப்பொழுதில் ஏமாந்தேன்!

பொதுநலத்தினை எதிர்பார்த்தேன்
சுயநலத்திடம் ஏமாந்தேன்!

எல்லோரிடத்தும் எதிர்பார்த்தல்
எப்போதும் ஏமாற்றமே – ஆனால்

கள்ளமில்லா கைக்குழந்தையினால்
ஏமாற்றம் என்பதில்லையே!

எழுதியவர் : இராம்குமார்.ப (5-Dec-19, 10:10 pm)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 121

மேலே