கண் இமை ஆவேனடி கண் போல காப்பேனடி
முத்துக்கள் சிந்தின அவள் சிரிப்பில்
முல்லை வாசம் தவழ்ந்தது உடலில்
காந்தத் துகள்கள் வீசிய
ஒற்றைப் பார்வையால்
என்னைக் கற்றையாக
அருகே கொண்டு சென்றாள்
கனவிலும் நனவிலும்
கண் முன்னே கிடந்து
இரவிலும் பகலிலும்
என்னை உலுக்குகிறாள்
கண் இமை ஆவேனடி
கண் போல காப்பேனடி
என்னிடம் வா கண்ணே
உதிரத்தில் கலந்து என்
உடலெங்கும் திரிபவளே
எத்தனை ஜென்மும்
நான் எடுப்பேன்
அத்தனையிலும் நீ தான்
எனக்குத் துணையாய் இருந்தால்
அஷ்றப் அலி