மரணம் சொல்லும் உண்மை

______________________________
நீ வாழ்ந்த வாழ்வின்
தகுதிக்கு ஏற்ப
உன் மரணம் நிகழும்

உன் மனதிற்கு
மட்டுமே தெரிந்த
ரகசியங்கள் ..
நீ செய்த தவறுகள்
இவைகளே உன்
மரணத்தை ஜனிக்கும் ..

பிறர்க்கு தெரியாது
என நீ செய்யும் பிழைகளை
நிறுத்திக்கொள் -கொஞ்சம்
திருத்திக்கொள் ..

இல்லையேல்
நோய்வாய்ப்பட்டு ,
உடல்ரனப்பட்டு,
பித்தம் சித்தத்தில் கலந்து ,
செவிகேளது
இமைதிராவது
நிமிடம் ஒவ்வொன்றும் ரணமாகி
மரணம் தழுவாதா??
என ஏங்கி ஏங்கி ..!!
தண்டனைகளைச் சுமந்து
பிணவறையில் கிடப்பாய் ...

அமைதியாக மரணம்
ஜனிக்க
உள்ளுணர்வு கொண்டு
வாழ தொடங்குவோம்

என்றும்...என்றென்றும்...
ஜீவன்✊✊

எழுதியவர் : ஜீவன்.. (9-Dec-19, 2:58 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 163

மேலே