நிலவு பெண்

மேக காதலனின்
பின்னால் நின்று
மெல்ல எட்டிப் பார்க்கும்
நிலவுப் பெண் ...

அதற்குப் பின்னே
வரலாமா என்று
அனுமதி கேட்டு
வரிசை கட்டி நிற்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்...

இவைகளை ரசிக்கும்
அழகிற்கு ஒரே இலக்கணமான
அழகுக்கு கனியே...

சொல்
எனக்கு
இனிய மாலை வணக்கம்...

எழுதியவர் : சாந்தி ராஜி (9-Dec-19, 10:56 am)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : nilavu pen
பார்வை : 166

மேலே