காதல் கடிதம் 3

காதல் கடிதம்

பேரழகி பெட்டகமே
நீ பிறந்தது முதல்
அழகிப்பொட்டியில்
யாருமே கலந்து கொள்ளவில்லை

ஏனென்றால்
பிரம்மன் கஞ்சனாய் இல்லாமல்
தன் கஜானாவில்
இருந்த மொத்த அழகையும்
இந்த காஞ்சனாவின்
எழிலுக்கே வழங்கி விட்டான்

அன்பே
நீ டீ கொடு குடிக்கிறேன்
தீ கொடு மறுக்காமல்
குளிக்கிறேன்

உன் கை பட்ட
விஷம் ஆனது ரசம்

உன் பிம்பம் பட்ட
கண்ணாடியின்
பாதரசம் பழரசமாய்
உருகி ஓடுகிறது

நீ என்னை பார்க்கும்
ஒவ்வொரு ஓரப்பார்வையும்
பார்வை அல்ல
என் காதல் குளிருக்குப்
போர்வை

நான் உனக்கு
சிறு பூ தானே
கொடுக்கிறேன்
தலையில் சூட
பரிசாய் ஏனடி
செருப்பு எடுக்கின்றாய்

விஜய் சொன்னதுபோல்
நீ சிங்கப் பெண்தான்
என் இதயத்தை
மானாய் வேட்டை ஆடுகிராய்

நீ என்னை
அடிக்கடி பொறுக்கி
என்கிறாய்

கொஞ்சம்
பொரு உன்
வாழ்க்கையை திறக்கும்
கீ என்னிடம் உள்ளது

எழுதியவர் : (9-Dec-19, 9:50 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 62

மேலே