தேடுதல் பலவுண்டு

முள்ளிருக்கும் மலர் செடியில்
கள்ளிருக்கும் மலர்கள்
அழகிருக்கும் மலர்களின் மேல்
வந்திருக்கும் வண்டுகள்

வாளிருக்கும் உறைகளில்
மறைந்திருக்கும் வீரம்
போர் வாளின் வீச்சினிலே
தடம் புரளும் உடல்கள் ,

பதமறியா இளமையிலே
தள்ளாடும் உள்ளங்கள்
இனம் புரியாக் காதலிலே
துவண்டு நிற்கும் மனங்கள் ,

அக்கரையோ இக்கரையோ
அலைபாயும் மக்கள்
அன்றிலிருந்து இன்றுவரை
அவனுக்கில்லை நீதி ,

மயக்கங்கள் பலவுண்டு மாறிவிட
மாற்றங்கள் மனித மனதினிலே
மனிதம் எங்கே மனிதம் எங்கே
உணர்ந்துவிட துடிக்கின்ற மனிதன்

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Dec-19, 11:51 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : theduthal palavundu
பார்வை : 237

மேலே