இல்லம் தேடி வருகிறோம்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னிடம் இருப்பதெல்லாம்
உனக்குச் சொந்தமில்லை
இறைவனின் ஆணையை
ஏற்று நடக்கிறோம்
சிறந்த எடுத்துக்காட்டாய்
தினந்தோறும்...
பல மேடு பள்ளங்களை
அன்றாடம் கடக்கிறோம்
மேடு பள்ளங்களை
உள்ளடக்கியதுதான் வாழ்க்கையென அன்றாடம் உணர்த்துகிறோம்...
கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
தொடர்ந்து பயணிக்கிறோம் உழைப்பின் உயர்வை உணர்கிறோம்...
எங்கள் சிக்னல் எப்போது வரும்?
காத்திருக்கிறோம் நாங்கள்
சிக்னலுக்காக காத்திருந்து
பல சிக்னல்களை கடந்து பயணிக்கிறது வாழ்க்கை....
எங்களுக்கு அடையாளம் உண்டு எங்களின் அடையாளத்தை பலர் உபயோகப்படுத்துகிறார்கள்....
உங்களுக்கான தேடல்கள் எங்களுடையது ஆகும்போது எங்களுக்கு மகிழ்ச்சி....
எங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க எங்களால் முடியாது...
அவரவர்களுக்கு உரியதை
அவரவர் இடம் ஒப்படைத்து மகிழ்கிறோம்....
வாகனமும் அலைபேசியும்
எங்கள் வழித்துணைு மட்டுமல்ல வாழ்க்கை துணை..
அலைபேசி பயன்பாட்டில்
நாங்கள் முக்கிய அங்கம்.
அலைபேசியில் ஆரம்பித்து அதனாலேயே தொடர்கிறது
எங்கள் பயணம்.
நிகழ்காலத்தின் நிஜத்தை
புரிந்து கொண்டு
நாங்கள் பெற்ற
பட்டம் மறந்து பயணிக்கிறோம்
எங்களுக்கான தேவைகளை
பூர்த்தி செய்ய...
எங்களுக்கான தேடல்கள்
உங்களுக்கான தேவைகள் மட்டுமல்ல
ஆயிரம் கனவுகளோடு
அன்றாடம் பயணிக்கிறோம்
உங்களுக்கான உணவுகளை சுமந்துகொண்டு
உங்கள் இல்லம் தேடி வருகிறோம்
எங்கள் எதிர்காலம் சிறக்குமென்ற நம்பிக்கையில்....