நம் வழியில் நாம் செல்வோம்

கண்களால் பெண்களை காண்பதைவிட மண்ணை காண்பது சிறந்தது; செல்லும் வழியில் கவனமாக செவிகளை அறிவால் பூட்டு வம்பு பேச்சுகள் காதில் விழாவண்ணம்.

புத்தியை கண்டபடி அலையவிட்டால் வைராக்கியம் ஏதடா?
மனம் பெண்ணே சந்தோஷமென்று அலைகிறதே பாரடா!
அது சந்தோஷமில்லடா.
நரகத்தின் நுழைவாயில்.

ஈ என்று ஈளிக்கிறாள் என்று எண்ணி கண்ணிலிழந்து மாடுகள் அவை கசாப்புக் கடைக்குச் செல்கின்றன.
அங்கு வெட்டுப்பட்டு வெட்டூண்டு சாகாமல் சாகின்றன, தனக்குப் பின் வாரிசு வேண்டி.

வேண்டாம்!
வம்பே வேண்டாம்.
மனமே மடிந்து போ.
குணமே விழித்துக் கொள்.
உடலை மறந்திடு.
ஆன்மாவே! நான் என்று உணர ஆணாவது, பெண்ணாவது ஏது?
எல்லாம் வெற்று சதைப்பிண்டங்கள்.
நாற்றமெடுக்கும் இவற்றின் மீது தான் நரன்களுக்கு எவ்வளவு ஆசை!?
அதிலே என்னவொரு பிடிப்பு?!

அறிவை விழிக்கச் செய்ய வேண்டிய இடங்களில் உடலை நினைத்துக் கொண்டிருந்தால் அறிவு எங்கே விழிக்கும்?
பல பெண்களோடு இச்சை கொண்டால் புத்தியும் பலவாறாய் திரிபடைய தான் யாரென்று தன்னை தானே அறிவது எங்கே?
மேடையேறி பெண்கள் நாம் கண்கள் என்பதும்,
இரவானால் விலைமாது வீடு தேடி செல்வதையும் பகுத்தறிவு என்றவன் எவ்வளவு பெரிய மடையன்?!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-19, 1:03 pm)
பார்வை : 1228

மேலே