சுதந்திரம்

சுதந்திர தாயகத்தில்..,
பேசுவதற்கு உரிமையுண்டு
நல்லவற்றை அல்ல,
கேட்பதற்கு உரிமையுண்டு
ஊழலை அல்ல ,
எழுதுவதற்கு உரிமையுண்டு
புரட்சிக்காக அல்ல ,
எவ்வாறாக இருப்பினும்
எழுவதற்கு உரிமையுண்டு
ஒன்றுபட்டால் ..,

இரவில் கிடைத்ததாலோ என்னவோ
நம் கண்களில் இன்னும்
இருள் மறையவே இல்லை
ஒளி கொடுக்க எழுவோம் ...
வெள்ளையனை வெளியேற்றிய பின்னும்
ஜாதி மதங்களை வெளியேற்றவே இல்லை
சமத்துவம் நிலவ எழுவோம்...
அனைத்திற்கும் தடை உடைந்த போதிலும்
நீதி தேவதையின் விலங்கு உடையவே இல்லை
தராசு சரியாமல் இருக்க எழுவோம்...


கண்டும் காணாத கண்களை தவிர்ப்போம் .,
பொய் பேசும் சொற்களை தவிர்ப்போம்.,
லஞ்சம் கொடுக்கும் கைகளை தவிர்ப்போம்.,
தீமைக்கு துணைபோகும் மனதை தவிர்ப்போம்.,
பேசியே செயலாற்றும் பழக்கத்தை தவிர்ப்போம்.,


விடியும் நாளை புதிதாய் அமைந்திட
பாரத தாயின் கண்கள் குளிருந்திட
நாளைய சமுதாயம் நலமாய் அமைந்திட
வறண்ட நிலங்களும் பசுமை அடைந்திட
புதிய சிந்தனை புத்துயிர் பெற்றிட
உழவன் நாட்டை உழுது நெற்பயிர்கள் நிமிர்ந்திட


சுதந்திரத்தின் மெய் பொருள் அறிவோம்
புதிதாய் ஒரு பாரதத்தை படைப்போம்
இந்தியனாய் வீழ்ந்தாலும்
தமிழனாய் எழுவோம்

இன்னும் வாங்கவில்லை சுதந்திரம்
இனியும் தேய்வதற்கில்லை நம் கரம் ...

- தமிழ் தாயின் மகள்

எழுதியவர் : தமிழ் தாயின் மகள் (11-Dec-19, 9:05 am)
சேர்த்தது : sparkle
Tanglish : suthanthiram
பார்வை : 301

மேலே