என்னவனின் பிறந்தநாள்

என்னவனின் பிறந்தநாள்

இதயம் திருடியவனின் உதய நாள்..
மனதை வென்றவனின்
ஜனன நாள்.
முத்தம் தின்றவனின்
முதல் நாள்.
தேகம் தீண்டியவன்
தோன்றிய நாள்...
ஆசை நாயகனின்
ஆதி நாள்.‌...
காதல் தந்தவனின்
தொடக்க நாள்.
உச்சி முகர்ந்தவன்
உயிர்த்த நாள்...
உயர வைக்கும்
உன்னத நாள்...
என் அழகன்..
எட்டிய நாள்...
மன்மத மாமன்..
மலர்ந்த நாள்..
என்னவனின் பிறந்த
நாள்..

எழுதியவர் : பானுப்பிரியா (11-Dec-19, 2:31 pm)
சேர்த்தது : செ பானுப்ரியா
பார்வை : 195

மேலே