மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்
தமிழ் எனும் தேருக்கு
புதுக்கவிதை எனும்
வடம் பிடித்தாய்!
இயற்கை எழில் அனைத்தையும்
சொல்லாலே படம் பிடித்தாய்!
தேசவிடுதலைக்கும்,பெண் விடுதலைக்கும்
பாடலாலே திடம் கொடுத்தாய்!
கம்பன் போல், வள்ளுவன்போல்
இலக்கியத்தில் தடம் பதித்தாய்!
இனிவரும் சந்ததியும்
நினைக்கும் படி
தமிழர்நெஞ்சில் நீங்காத
இடம் பிடித்தாய்!