புதையலில் தொலைந்து

நல்லிரவு சந்திரனாய் பூமியின் மீது
வானம் பார்க்கும் அவள்

புதையலைத் தேடிப் போராடும் பேராசைக்காரனாய் அவன்

பூமிக்குள் நுழைந்தவன் இருளைக் கண்டு பின்வாங்கினான்

பயத்தோடே எட்டிப்பார்க்கும் திருட்டு எலியாய் முன்னும் பின்னும்

துளவிக் கிடந்தவனுக்கு துணையாய் நின்றும்

உடல் சிலிர்த்து காக்கை எச்சம் உமிழ்ந்து

களைத்துப் போனான் புதையலில் தொலைந்து

இன்னும் அவள் அதிகாலை சந்திரனாய்

எழுதியவர் : நா.சேகர் (12-Dec-19, 6:50 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 91

மேலே