அலையோடு விளையாடு
![](https://eluthu.com/images/loading.gif)
வங்கக்கடல் பொங்கையிலும்
அச்சம் தவிர்த்திடு/
ஓங்கும் அலைக்குள்ளும்
புகுந்து நீந்திடு/
இறங்கி மூழ்கியே நீ
முத்தெடுத்திடு /
கண்ணீரையும் உப்பு நீரோடு
கலந்திடு/
கரை தொடும் நுரையையும்
அள்ளிடு/
அலையோடு எழுந்திடும்
சிப்பியையும் எண்ணிடு/
எட்டுக் கால் நண்டையும்
பிடித்திடு/
துள்ளிடும் மீனைக் கண்டால்
மகிழ்ந்திடு/
படகிலே ஏறி கடலோடு
உறவாடு/
ஏழ்மையை விரட்டிட
வாழ்வோடு போராடு/
ஆழியே மீனவனின் தாயெனப் பாடு/
துன்பத்திலும் இன்பமாய்
அலையோடு விளையாடு