செல்லக்கிளியே பிள்ளைக்கவியே
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் அல்லிமலர் கண்ணுறங்கு/
காவியமும் நான் (பாட )
கவலையின்றி நீயுறங்கு/
இமை மூடி நீ துயில /
நானும் இன்னிசை பயில /
தாலாட்டுப் பாட்டு என்று
பேரொன்று வந்ததம்மா/
ஆராரிராரிரரோ ராரராரியாரிவரோ/
திருஷ்டியும் வந்து
சேந்துக்குமே கண்மணியே /
ஒங் கன்னக்
குழியைப் பாத்துப்புட்டா/
பால் வாடை வீசுதடி செல்லமே/
உன் பவள முல்லை வாயினிலே/
ஆழ் உறக்கம் நீ கொண்டால்/
பால் நிலவு
காட்டுவேனடி வானத்திலே/
அழுகை நிறுத்தி நீ உறங்க /
மெதுவாகத்
தொட்டில் ஆட்டிடுவேனடி/
ஆராரோ ஆரிவரோ ஆராராரி யாரரோ/
பொன் வண்டுக்
கண்ணுக்குள்ளே /
கனவுக்குள் பொய்யுரைக்க
நரியும் வந்து விடும் /
ஏங்கி அழ வேண்டாமடி /
இமை திறந்து
அன்னையென்னைப் பாருமடி/
மத்தாப்பு சிரிப்பழகி
மல்லிகைப்பூ கையழகி/
மான் வண்ண மேனியழகி/
உன் மாம்பூக் கன்னத்திலே அம்மா /
தேன் போல் முத்தம் பதிப்பேனடி/
வாடாமல் உன்னை அணைத்து /
மார்வோடு இணைத்து /
பாலும் தான் ஊட்டுவேனடி /
கண்ணுறங்கு கண்ணுறங்கு
செல்லக்கிளியே பிள்ளைக்கவியே/
நிறைந்த துக்கம் கரையும் வரை
நீ உறங்கு ---ஆராரோ ஆரிவரோ /