குடியுரிமை

தீ பந்தம் ஏந்தியே
ஒரு பந்தம் கூடுது
தீர்ப்பினை திருத்தவே
நெருப்பினை ஏந்துது
முடியாது மாற்ற முடியாது
நீதியை பூட்ட சாவிகள் கிடையாது

கூட்டங்கள் ஒன்று சேர்ந்தது
ஆட்டங்கள் அடங்க போகுது
குடியுரிமையை மறைத்து வைப்பதா
இந்தியர்களை ஒதுக்கி வைப்பதா

எதற்க்காக இந்த சட்டம்
பொறுக்காதே எங்கள் இரத்தம்
குரல்வளையை கிழித்து குரல்கள் ஓங்குது
குடியுரிமையை இணைக்க குருதி சிந்துது

தாய்நாட்டை மறப்பதா
குடியாண்மை இழப்பதா
ஒருபோதும் இயலாது
கடல் என்றும் மூழ்காது

சுடுங்கள் சுடுங்கள்
இன்னும் சுடுங்கள்
குண்டுகள் மார்பை துளைக்கட்டும்
இரத்தங்கள் இந்திய பூமியை நனைக்கட்டும்

ருசி அறிந்து
பூமியே சொல்லும்
இவர்கள் இந்தியர்கள் என்று...

BY ABCK

எழுதியவர் : (14-Dec-19, 9:08 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 167

மேலே