என் இதயத்தில்

வார்த்தைக்கு வார்த்தை
உச்சரிப்பு
வலி மறந்து என்
உதடுகள் உச்சரித்தன
உன் பெயரை
கோபம் கொள்ளும்
உன் கண்கள்கூட
உதடுகள் வரையும் ஓவியத்தால்
சாரப்பாம்பாய் பதுங்கிக்கொள்ளும்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
என் இதயத்தில் சொர்கமாகும்
என் மீது நீ தீண்டும்
விரல்கள்கூட காந்தமாகும்
காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்
இரும்பு அல்ல நீ
என் இதயத்தில் ஒட்டிக்கொள்ளும்
கரும்பு நீ.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (21-Dec-19, 12:13 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 126

மேலே