சிந்தனை செய்
சிந்தனை செய்
போராட்டமில்லா வாழ்க்கையில்
புதுமைகளும் இல்லை
புத்துணர்வும் இல்லை
ஒரு பெண் தாயாக வலியோடும்
ஒரு புழு வண்ணத்துப்பூச்சியாக
இருளோடும் - ஒரு மெழுகு
ஒளிர்ந்திட நெருப்போடும்
ஒரு விதை மரமாக கதிரோடும்
மண்ணோடும் போராடினால் மட்டுமே
போராடு சுயநலமாயல்ல
பொதுநலமாய் !!
இவன் மு. ஏழுமலை