உன் காதல் பார்வை – கலித்துறை
கலிநிலைத்துறை
(தேமா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அன்னாய், உன்னைநான் பார்க்குமுன் நானன்று வேறு;
என்னை நீயினிப் பார்த்திடும் பார்வையும் வேறு;
இன்றென் செயலுக்கு நானுமே வருந்தப்போ வதில்லை;
என்றன் செய்திடாச் செயலுக்கும் வருந்திடல் வீணே! 1
விருத்தக் கலித்துறை
நான்செய்த தெல்லாமே நன்மைக்கென நம்பு கிறேன்;
தேன்போன்ற உன்காதல் தீஞ்சுவையெனக் குத்தித் திப்பே!
வான்தோயும் உன்னத வாழ்வேயென எல்லாம் வளமே;
மான்கன்று போல மகிழ்ந்தேமிகத் திளைப்போம் அன்பில்! 2
- வ.க.கன்னியப்பன்