கண்கள் இரண்டிலும் தீபங்களின் ஆராதனை
குவிந்த இதழ்களில்
பளிச்சிடும் முல்லை
கவியும் இமைகளில்
அழகிய அந்தி மாலை
கண்கள் இரண்டிலும்
தீபங்களின் ஆராதனை
நெஞ்சின் ஒவ்வொரு உணர்வும்
எழுதுது உந்தன் கவிதை
அந்தக் கவிதைகள் விரிக்குது
மனதிலோர் ஆனந்த சூழலை !
குவிந்த இதழ்களில்
பளிச்சிடும் முல்லை
கவியும் இமைகளில்
அழகிய அந்தி மாலை
கண்கள் இரண்டிலும்
தீபங்களின் ஆராதனை
நெஞ்சின் ஒவ்வொரு உணர்வும்
எழுதுது உந்தன் கவிதை
அந்தக் கவிதைகள் விரிக்குது
மனதிலோர் ஆனந்த சூழலை !