வழியறியாக் கவிதை
அணைக்கும் ஆசை
அருகே சென்றால்
அகன்று செல்கிறது
உன் அழகு
வரிகளில் நுழையும்
வழி அறியாமல்
ஆச்சரியத்தில்
அகலக் கண் விரித்து
உன்னைப் போல்
ஆக முடியவில்லையே எனும்
மாச்சரியத்தில்
பெருமூச்சு விட்டு
முற்றுபெறாமலே
தொக்கி நிற்குது
இங்கே என் கவிதை
அஷ்றப் அலி