காதலியே
ஒரு நீளமான காத்திருப்பிற்குப்பின்
நீ வந்தாய்..
தளர்ந்திருந்த நடையில்
உன் ஆர்வமின்மை தெளிவாகத்தெரிந்தது.
என்னைத்தவிர்த்திடும் உன்
கண்கள்
அங்கு உதிர்ந்துகொண்டிருந்த
இலைகளை எண்ணிக்கொண்டிருந்தன..
ஒருதுளி விழிநீர் வழியக்காத்திருக்க
நான் பார்த்துவிடக்கூடாதென
அவசரமாய் சுண்டுவிரலில்
ஏற்றுக்கொண்டாய்..
உன் அகத்தின் தீவிரத்தில்
நீ எனை எரித்துவிடுவாயென
பயந்துதான் போயிருந்தேன் ..
இவ்வளவு பயங்கரத்தின் நடுவில்
எப்படி நான்
காதலுரைப்பேன்???