புத்தாண்டு

புத்தாண்டுகள்
பிறந்துகொண்டே இருக்கின்றன..
மாலைச்செய்திகளில் அரசியல்
ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தபொழுது ஒரு
அறிவிப்பு வந்தது.
தூரத்தெற்கில் ஃபிஜியிலோ
அல்லது நியூசிலாந்தின் ஒரு முனையிலோ
புத்தாண்டு பிறந்துவிட்டதாக..
பிறகு உணவுக்குப்பின்னான ஓய்வில்
ஆஸ்த்திரேலியாவில் பிறந்ததாக
சொன்னார்கள்.
அது பிறந்தபொழுதுதான் உனக்கு
ரகசிய குறுந்தகவல் அனுப்பினேன்.
அடுத்து ஜப்பானில் பிறந்தபோது
நீ ஏன் இன்னும்
ஆன்லைன் வராமல் இருக்கிறாய் என
உன்னை திட்டிக்கொண்டிருந்தேன்..
பிலிப்பைன்ஸிலும் ப்ரூனேவிலும்
புத்தாண்டு பிறந்தபொழுது
என் நண்பனுக்கு வாழ்த்து அனுப்ப..
அவனோ
சென்ற வருடத்தை நாராசமாய்
திட்டினான்..
புத்தாண்டு இந்தோனேஷியாவை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது
நானும்
இறந்த வருடத்தை கொஞ்சம்
சபித்து வைத்தேன்..
ஆனாலும்
இறந்த வருடத்தில்தான் உனைப்பார்த்தேன் என்பதையும்
மறுப்பதற்கில்லை..
மலேசியாவில் புத்தாண்டு நுழைய
நான் சென்ற வருடத்தை
காதலித்துக்கொண்டிருந்தேன்
பிரிவின் வலியும்
இழப்பின் துயரும்
ஒரு கொடுங்கனவுபோல சிரித்துக்கொண்டிருந்தன..
இறுதியாய்
இநதியாவின் கதவினை புத்தாண்டு
தட்டிக்கொண்டிருந்தது..
நான்
இறநத வருடத்திற்காக ஒரு
மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறேன்.

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (31-Dec-19, 9:59 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : puthandu
பார்வை : 141

மேலே