பிரம்ம ரந்த்ரம் கெஜகர்ணம்
பிரம்ம ரந்த்ரம்
சமாதிசுழி னையாம் அமாவாசி சூன்யம்
சமாதி பரபிரும்மம் என்று - - சமாதியில்
மூச்சைப்பூ ரித்துகும்பித் தாச்சர்யம் ரேசிக்கா
மூச்சைக் கபாலமேற்றித் தேர்
கெஜகர்ணம்
உள்ளிழுக்கப் பூரகம் உள்நிறுத்தக் கும்பகம்
உள்ளிழுத்தக் காற்றை வெளிவிடாது --உள்ளுக்குள்
சந்திரனில் அந்திரமாய் நிற்கொருவ னைத்தொட
அந்த இடம்சுளுக்கும் பார்
மூச்சை உள்ளிழுக்கப் பூரகம் மூச்சை அடக்குவது கும்பகம். அதை வெளிதள்ளுவது ரேசகமாம்.
அ ந்தக் கும்பித்த மூச்சை வெளிவிடாது (ரேசிக்காது ) அப்படியே தலை எனும் ச ந்திர மண்டத்திற்கு ஏற்றி நிறுத்தி நாம் ஒருவனைத் தொட்டால் அவனுடைய அந்த அவயம் செயல்படாது சுளுக்கிக் கொள்ளுமாம்.