காதலியே
பிடித்திருக்கிறதா என்றேன்..
உணர்ச்சியற்ற ஒரு சிரிப்பினைதந்து நகர்ந்தாய்..
விஷம்வைத்துப்பேசும் வழக்கத்தை
யாரிடம் கற்றுக்கொண்டாயோ தெரியவில்லை
தினம்தினம் இறந்துபிறக்கிறேன்
இறுதியாய்
கண்சிமிட்டிச்சிரிப்பாயே
அதன் வழியில்....
தனல் கொண்டு குளிர்வீசும்
விழி உன்னிடம்
அதிசயம்தானடி..
கண்ணாடிமுன் நின்று ரசித்துக்கொள்
என்கண்கள் வழியே
பிரபஞ்ச அழகி நீயாகிவிட்டாய்.