உயிரில் நீ

இமைகளில் சிக்கிக்கொண்டு
உறங்கவிட மறுக்கின்றாய்
பொழுதுகளில் சிக்கிக்கொண்டு
விழிக்கவிட மறுக்கின்றாய்
உறவுகளில் சிக்கிக்கொண்டு
பிரியவிட மறுக்கின்றாய்
உணர்வுகளில் சிக்கிக்கொண்டு
சேரவிட மறுக்கின்றாய்
வார்த்தைகளில் சிக்கிக்கொண்டு
பேசவிட மறுக்கின்றாய்
புத்தியில் சிக்கிக்கொண்டு
புரியவிட மறுக்கின்றாய்
நினைவுகளில் சிக்கிக்கொண்டு
வாழவிட மறுக்கின்றாய்
உயிரிடையில் சிக்கிக்கொண்டு
என்னை
சாகவிடவும் மறுக்கின்றாய்!

எழுதியவர் : சின்னா (10-Jan-20, 8:12 pm)
பார்வை : 392

மேலே