அவள் காதல் மொழி
சந்தமிகு கம்பன் கவிதைகள் போல்
தேன் சிந்தும் புகழேந்தி வெண்பாக்கள் போல்
நீல வான குளிர் நிலவு போல்
கொஞ்சும் அவள் காதல் மொழி
எனக்கு காதலில் ஒரு தனி
எழிலைக் காட்டியது இனித்து குளிர்ந்து
கவிதையே காதலியாய் உயிர்கொண்டு
பேசுவது போல்