சின்னா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சின்னா |
இடம் | : பட்டுக்கோட்டை |
பிறந்த தேதி | : 02-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 6 |
இமைகளில் சிக்கிக்கொண்டு
உறங்கவிட மறுக்கின்றாய்
பொழுதுகளில் சிக்கிக்கொண்டு
விழிக்கவிட மறுக்கின்றாய்
உறவுகளில் சிக்கிக்கொண்டு
பிரியவிட மறுக்கின்றாய்
உணர்வுகளில் சிக்கிக்கொண்டு
சேரவிட மறுக்கின்றாய்
வார்த்தைகளில் சிக்கிக்கொண்டு
பேசவிட மறுக்கின்றாய்
புத்தியில் சிக்கிக்கொண்டு
புரியவிட மறுக்கின்றாய்
நினைவுகளில் சிக்கிக்கொண்டு
வாழவிட மறுக்கின்றாய்
உயிரிடையில் சிக்கிக்கொண்டு
என்னை
சாகவிடவும் மறுக்கின்றாய்!
தோட்டத்து பூக்கள்
உன்னை
பிடிக்கும் என்றது
பறித்துக் கொண்டாய் !
வீட்டில் இருந்த
கரு மையும்
உன்னை
பிடிக்கும் என்றது
தீட்டிக் கொண்டாய் !
பட்டு வண்ணசீலையும்
உன்னை
பிடிக்கும் என்றது
உடுத்திக் கொண்டாய் !
ஆழியில் இருந்த
முத்து மணியும்
உன்னை
பிடிக்கும் என்றது
அணிந்து கொண்டாய் !
கடைவீதியில் இருந்த
சலங்கை கொலுசும்
உன்னை
பிடிக்கும் என்றது
மாட்டிக் கொண்டாய் !
பித்தன் நானும்
உன்னை
பிடிக்கும் என்றேன்
முறைத்துக் கொண்டாய் !
ஏனடி இந்த
வஞ்சம் - நான்
என்றோ உன்னிடம்
தஞ்சம் !!!
நான்யார் நீயார் நாம்யார்
நமக்குச் சொன்னார் பெரியார்
தாயார் போல வந்தார் -அறிவை
தந்தார் எங்கள் பெரியார்
வையம் போற்றும் இனியார்
வைக்கம் வீரர் பெரியார்
அய்யா தானே பெரியார்
அவர்போல் இங்கே இனியார் ?
மூட பழக்கத்தை எதிர்த்தார் -முக
மூடியை எல்லாம் கிழித்தார்
தாடிக் காரப் பெரியார் -
தமிழர் பெற்ற வலியார்
மனிதனை நினைக்கச் சொன்னார்
மனதில் வலிமை தந்தார்
தனியாள் இல்லை பெரியார்
தமிழர் பெற்ற படையார்
நான்யார் நீயார் நாம்யார்
நமக்குச் சொன்னார் பெரியார்
தாயார் போல வந்தார் -அறிவை
தந்தார் எங்கள் பெரியார்
வையம் போற்றும் இனியார்
வைக்கம் வீரர் பெரியார்
அய்யா தானே பெரியார்
அவர்போல் இங்கே இனியார் ?
மூட பழக்கத்தை எதிர்த்தார் -முக
மூடியை எல்லாம் கிழித்தார்
தாடிக் காரப் பெரியார் -
தமிழர் பெற்ற வலியார்
மனிதனை நினைக்கச் சொன்னார்
மனதில் வலிமை தந்தார்
தனியாள் இல்லை பெரியார்
தமிழர் பெற்ற படையார்
ஆயிரம் புலுக்களை வேகவைத்து
அழகு நளின சரிகைகளோடு
பீரோவில் தூங்கும்
புதுப்பட்டு
வீதியில்
கை உடைந்து கால் உடைந்து
எறிந்து கிடக்கும்
எல்லா பொம்மை
முகத்திலும் இருக்கிறது
என் வெருங்கையை கண்டு
குழந்தை இழக்கப்போகும்
புன் சிரிப்பு
மரக்கிளையில்
நீண்ட கருத்த அலகோடு
இறக்கை கோதுகிற
காகத்திற்கு
கையில் உணவுடன்
தன்னைப்போலவே
கரைந்தழைப்பவர்
தனக்கு
என்ன உறவென்பது பற்றி
எந்தப் புரிதலுமில்லை -
வடாகம் கொத்துகையில்
விரட்டியடிக்கும்
கவனம் பற்றியும்
மேலும்
தான் யாருடைய பித்ரு
என்பது பற்றியும்
மரக்கிளையில்
நீண்ட கருத்த அலகோடு
இறக்கை கோதுகிற
காகத்திற்கு
கையில் உணவுடன்
தன்னைப்போலவே
கரைந்தழைப்பவர்
தனக்கு
என்ன உறவென்பது பற்றி
எந்தப் புரிதலுமில்லை -
வடாகம் கொத்துகையில்
விரட்டியடிக்கும்
கவனம் பற்றியும்
மேலும்
தான் யாருடைய பித்ரு
என்பது பற்றியும்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்
முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்
இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்
அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசே
அம்மாவின் திட்டும் அழகு!
அப்பாவின் கொட்டும் அழகு!
அண்ணாவின் அதட்டல் அழகு!
அக்காவின் மிரட்டல் அழகு!
அத்தனையும் மறந்து விட்டு
கூட்டாஞ்சோறு உண்ணும் வேளை
வாழ்க்கைதான் அழகோ அழகு!
நண்பனவன் முறைப்பும் அழகு!
எதிரியவன் சிரிப்பும் அழகு!
தோழியவள் அடியும் அழகு!
காதலில்காத்திருக்கும் நொடியும் அழகு!
சின்னசின்ன விஷயங்களுக்காய் வாழ்வை
சின்னாபின்னமாக்காமல் சேர்ந்திருக்கும் போது
வாழ்க்கைதான் அழகோ அழகு!
மழலைகளின் புன்னகை அழகு!
மாலைதரும் சாரல் அழகு!
தவளைகத்தும் ஒலியும் அழகு!
கவலைபோக்கும் இயற்கை அழகு!
கிடைக்கும் சிறுசிறு சந்தோசங்களில்
வாழ்வை அனுபவிக்க பழகிக்கொண்டால்
வாழ்க்கைதான் அழகோ அழகு!
இருதயம்
இடமாற்றம் அடைகிறது
இருவிழிக்குள்
இவ்வளவு வசீகரமா......?
இருநொடிக்குள்
இருநூறு கேள்விகளை
தொடுக்கிறதே
இது என்ன
வேலைக்கு
தேர்ந்தெடுக்கும் தமிழக அரசின்
வினாத்தாளா..........?
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேனடி
லஞ்சம் எவ்வளவு சொல்
தந்துவிடுகிறேன்
எது எழுதினாலும் தேர்ந்தெடுத்துவிட
காற்று வரும்
சாலை ஓர புளுதி வரும்
அடி பென்னே
உன் முந்தானையால் மூடாவிட்டால்
பல இளைஞர்களின்
பார்வையும் வரும்