விடுமுறையா வீட்டுப்பாடமா
வீட்டிலிருப்பவர்களும் சேர்ந்து முடிப்பதால்தான்
வீட்டுப்பாடம் என்று பெயரிட்டனரோ....
விடுமுறை விட்டாலே - இலவச இணைப்பாக
வீட்டுப்பாடமும் சேர்ந்தே தந்துவிடுகிறாா்கள்
உண்மையை சொல்வதாயின்...
ஒருவரை படிக்க வைக்க
ஒரு குடும்பமே படிக்கின்றோம்...
அதுவும் - சிறிய வகுப்பு
சின்ன குழந்தைகள்
பென்சில் பிடிப்பதே தகிடத்தோமாக...
இதில் - அவர்கள் கத்தரிபிடித்து
கத்தரிக்காய் செய்ய வேண்டும்...
தெர்மகோல் வைத்து
ஒன்பதுகோள் செய்யனும்...
விளக்கப்படம் ( சாா்ட்) கொண்டு
விளக்கமறியா நுண்படம் வரையனும்
எந்த விடுமுறை வீட்டுப்பாடமும் -
பிள்ளைகள் செய்வதாக இல்லாமல்
பிள்ளைகளுக்காக பெற்றவர்களே
செய்வதாக உள்ளது - என்ன செய்வது
குழந்தைகள் - கொஞ்சம் பேசவும்
நடக்கவும் ஆரம்பிக்கும்போதே...
நீட்டிற்கு பயிற்சியளிக்கப்படுகிறது....!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி