யதார்த்தமான வாழ்கை💚

நேற்றை வரைந்த
இன்பங்கள் எல்லாம்
இன்றுக்கான உருவம்
ஆவதேனோ...

காற்றோடு கட்டிவிட்ட
மூச்சுக்கள் எல்லாம்
அவிழ்ந்து சிறகடிப்பதேனோ...

கல்வெட்டில் புதைந்து
மடிந்த வார்த்தைகள்
சுறுசுறுப்பாக பொருளுரைப்பதேனோ..

புல்மீசையின் துளிர்கள்
அறும்பு மீசைக்கு
கனியாவதேனோ....

தூங்கிய உணர்வுகள்
தூங்காமல் என்னோடு எழுந்து
நடுநிசிக்கு தேநீர் ஆவதேனோ...

நிறமான நினைவுக்கு
மீண்டும் மீண்டும்
நித்தியமாக நகைப்பை தீட்டி
மனம் களிப்பதேனோ...

சிந்திய மின்னல்
துளிகள் எல்லாம்
அழகான அடைமழைக்கு
ஆடையானதேனோ....

வினாக்களுக்கு முக்காடு
போர்த்திய நாட்கள்
விடையாக முகமூடியையும்
திறப்பதேனோ....

வாழ்கையில் நிரம்பி
தத்தளித்த வெள்ளம்
காரணத்தோடு வற்றிப்போவதேனோ...

மாலையை உடைத்து
பிறக்கும் இரவு செவ்வானம் என்று
இன்று தெரிந்ததேனோ
(இஷான்)

எழுதியவர் : இஷான் (12-Jan-20, 7:22 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 417

மேலே