போகிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள்
ஓசோன் படலத்தின் ஓட்டை வழியே
ஒய்யாரமாய் இறங்கி வந்தான் கதிரவன்-
எரிக்க கூடாத குப்பையைக் கூட
எரித்த மனிதர்களால் காற்று மாசடைந்தது-
ஓசோன் விரிவடைந்தது என்றான்- காலத்திற்கேற்ப
மாறுங்கள் மனிதர்களே - எரிக்க வேண்டியது -
மனதில் குவிந்த குப்பைகளைத் தான் -
நம் முன்னோா்களின் வழக்கங்கள் யாவும் -
இயற்கையை சீராக்கவே யன்றி- என்றும்
இயற்கையை சீரழிக்க அல்ல - ஆதலால்
தீய எண்ணங்களுக்கு மட்டும் தீவையுங்கள்-
ஓசோன் துளையென்பது புவிக்குவந்த புற்றுநோய்
அந்த புற்றுநோயை - இயற்கைச் சூழலைப்
பாதுகாத்து மீட்டெடுப்போம் - பாசமிகு உறவுக்கும்
பாசமிகு நட்புக்கும் போகிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள்....
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி